ஐநாவின் துணை பொது செயலாளராக சத்யா.எஸ். திருபதி என்ற இந்தியர் நியமனம்.

169

சத்யா.எஸ். திருபதி என்ற இந்தியர் ஐநாவின் துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் தலைவராக இவர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளாக ஐ.நா-வில் பணியாற்றி வரும் திருபதி பல்வேறு முக்கிய திட்டங்களில் பங்களித்துள்ளார். 35 ஆண்டுகளாக வழக்கறிஞராகவும் பொருளாதார வல்லுநராகவும் செயல்பட்டுள்ளார். இவரை, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்ரெஸ் துணை பொதுச்செயலாளர் பதவியில் நேற்று நியமித்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவை இனி திருபதி வழிநடத்துவார்.

SHARE