அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம்- ஆள்பதிவு திணைக்களம் தெரிவிப்பு.

197

ஆள்களைப் பதிவு செய்து அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை ஆள்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் திணைக்களம் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது.

அத்துடன், புதிய கட்டண திருத்ததின் அடிப்படையில், 15 வயதைப் பூர்த்தியடைந்து முதற் தடவையாக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்திற்கு 100 ரூபா அறவிடப்படும்.

தேசிய அடையாள அட்டையொன்றில் திருத்தம் மேற்கொண்டு அதன் பிரதியைப் பெற்றுக்கொள்வதற்கு 250 ரூபா அறவிடப்படுவதுடன், காணாமல்போன தேசிய அடையாள அட்டையொன்றின் பிரதியைப் பெற்றுக்கொள்வதற்கு 500 ரூபா அறவிடப்படும்.

குறிப்பிட்ட கட்டண திருத்தங்களை எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து பிரதேச செயலகங்களின் ஊடாகவோ அல்லது கிராம சேவகர் ஊடாகவோ செலுத்த முடியும்.

மேலும், இவ்வாறு பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளப்பட்ட பற்றுச்சீட்டினை விண்ணப்பத்தில் இணைத்து ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE