ஆசிய விளையாட்டு விழாவில் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் இலங்கை.

202

ஆசிய விளையாட்டு விழாவில் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் இலங்கை இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் மேசைப்பந்து போட்டியிலும் தோல்வியடைந்தது.

 

இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தா மற்றும் பலம்பங்கில் நடைபெற்றுவரும் 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதல்முறையா இலங்கையிலிருந்து 177 வீர வீராங்கனைகள் கலந்துகொண்டனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட இலங்கைக்கு இதுவரையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

குழு போட்டிகளான ஹொக்கி மற்றும் கரப்பந்தாட்டத்தில் சற்று தேரியிருந்தாலும் பதக்கம் வெல்லும் அளவிற்கு இலங்கை அணி திறமைகளை வெளிப்படுத்தவில்லை. அதேபோல் மெய்வல்லுநர் போட்களில் ஓரிருப் பிரிவுகளில் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தாலும் முதல் மூன்று இடங்களுக்குள் வரமுடியாமல் போனது.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் மேசைப்பந்து போட்டியில் இலங்கையின் ரணசிங்க இமேஷ் மற்றும் மதுரங்கி ஜோடி தாய்லாந்து இரட்டையர் எதிர்கொண்டது.

இதில் 3 நமிடங்கள் நடைபெற்ற முதல் செட்டை 11 -1 என தாய்லாந்து வென்றது. அதன்பிறகு 4 நிமிடங்களுக்கு நீடித்த இரண்டாவது செட்டையும் 11 – 2 என தாய்லாந்து வெல்ல மூன்றாது சுற்றிலும் 11 -5 என இலங்கை வீழ 3-0 என்ற செட் கணக்கில் இலங்கை ஜோடி அதிர்ச்சி தோல்விகண்டு போட்டியிலிருந்து வெளியேறிது.

SHARE