-மன்னார் நகர் நிருபர்-
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆட்காட்டிவெளி பங்கின் சாளம்பன் கிராமத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள புனித அடைக்கல அண்னை ஆலயத்தை நேற்று செவ்வாய்க்கிழமை(4) மாலை 5.30 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவல் பெர்னாண்டோ ஆண்டகை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
குறித்த ஆலையத்தை ஆயர் அவர்கள் அபிசேகம் செய்து வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இதன் போது அருட்தந்தையர்களும் ஆயருடன் இணைந்து குறித்த ஆலயத்தை திறந்து வைத்தனர்.
குறித்த நிகழ்வில் ஆட்காட்டிவெளி பங்கு மக்கள் உற்பட மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



