ஒரு நாளைக்கு இவ்வளவு உப்பு தான் சாப்பிடணுமாம்!

250

நம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.

உப்பின் அளவு சராசரியாக ஒரு நாளைக்கு 1500 மில்லி கிராம் இருக்க வேண்டும் என அமெரிக்க இதய மையம் தெரிவிக்கிறது. அமெரிக்க நபர் ஒருவர் ஒரு நாளைக்கு 3400 மில்லி கிராம் அளவு சோடியம் எடுத்துகொள்வதாகவும், ஆனால் 2300 மில்லி கிராமிற்கு மேல் இந்த அளவு இருக்கக் கூடாது எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

அளவுக்கு அதிகமான உப்பு இதய ஆரோக்கியத்தை பாதிக்கும். இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள், குறைந்த அளவு சோடியம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ஆனால், தீவிர இதய பாதிப்பில் உள்ள நோயாளிகள், எந்த அளவு உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என அமெரிக்க இதய மையம் தெரிவித்துள்ளது.

உடலில் உள்ள சோடியத்தின் அளவு குறைந்தாலும் பிரச்சனைதான். ஏனெனில் அவ்வாறு குறைந்தால் தசைவலி மற்றும் தன்னிலை இழத்தல் போன்றவை ஏற்படும். எனவே, சோடியம் சமநிலையில் இருப்பது மிக அவசியம்.

SHARE