இமைக்கா நொடிகள் 5 நாட்களில் இத்தனை கோடி வசூலா! நயன்தாரா உண்மையாகவே வேற லெவல் தான்

199

நயன்தாரா, அதர்வா நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் இமைக்கா நொடிகள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் வெளிவந்த 5 நாட்களில் ரூ 16 கோடி வரை தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்துள்ளதாம், இது மட்டுமின்றி கேரளாவில் ரூ 2 கோடி, கர்நாடகாவில் ரூ 1.5 கோடி, துபாயில் ரூ 1 கோடி என உலகம் முழுவதும் ரூ 22 கோடிகளுக்கு மேல் தற்போது வசூல் செய்துவிட்டதாம்.

கண்டிப்பாக இமைக்கா நொடிகள் நயன்தாராவின் மற்றொரு ஹிட் படம் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை, மேலும், அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என நயன்தாரா ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE