தெறித்து ஓடிய சிம்பு, ஏன் இப்படி ஒரு மாற்றம்

133

சிம்பு என்றாலே வம்பு என்று தான் சொல்லி வந்தார்கள். ஆனால், மணிரத்னம் படத்தில் இத்தனை நல்லவரா சிம்பு என்று கேட்கும் விதத்தில் படப்பிடிப்பு சென்று அசத்திவிட்டார்.

இந்நிலையில் நேற்று செக்கச்சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது, இதில் சிம்புவும் கலந்துக்கொண்டார்.

அப்போது அவரை மேடையில் பேச சொல்ல, முதல் சில நிமிடம் ரசிகர்கள் கைத்தட்டி சிம்புவை சந்தோஷத்தில் ஆழ்த்தினர்.

பிறகு மைக் எடுத்த சிம்பு ‘சார்(மணிரத்னம்) நன்றி, அதை தவிர நான் வேறு ஏதும் சொல்ல மாட்டேன்’ என்று கூறி ஓடியே விட்டார்.

அட என்ன சிம்பு மைக் பிடித்தாலே பல மணி நேரம் பேசுவார், இப்படி மாறிவிட்டாரே? என்று அனைவரும் அசந்துவிட்டனர்.

SHARE