மக்களின் இளவரசி டயானா இறந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவர் புதைக்கப்பட்ட இடம் இதுவரை ஓரளவு ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.
தற்போது அவரது 21 அவது நினைவு நாள் கடந்த நிலையில் அவர் புதைக்கப்பட்ட இடம், அது அமைந்திருக்கும் தீவு ஆகியவற்றின் படங்கள் வெளியாகியுள்ளன.
Northantsஇலுள்ள Althorp House என்னும் இடத்தில் இளவரசி டயானாவின் உடல் அமைதி கொண்டுள்ளது.
பளிங்கு போல் தெளிவான ஒரு ஏரியின் நடுவே அமைந்துள்ள பசுமை நிறைந்த தீவை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது, அவ்வளவு அழகு.
1975ஆம் ஆண்டு டயானாவின் தந்தை எட்டாம் Earl Spencer என்ற பட்டத்தை பெற்றதும், டயானா Northantsஇலுள்ள தனது பூர்வீக இலத்திற்கு முதலாவதாக சென்றார்.
1992ஆம் ஆண்டு அவரது தந்தை இறந்ததும் அவரது பூர்வீக வீடு டயானாவின் இளைய சகோதரரான சார்லசுக்கு அளிக்கப்பட்டது.
அங்கு டயானாவின் நினைவாக அவரது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒவ்வொரு ஓக் மரம் நடப்பட்டது.
துரதிர்ஷடவசமாக அங்கு இப்போது 36 மரங்கள் மட்டுமே இருக்கின்றன, அவர் தனது 36ஆவது வயதில் கோர விபத்தில் உயிரிழந்து விட்டதால்.