தினமும் 5 நிமிடம் இதை மட்டும் முகத்தில் தடவுங்கள்

142

இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தால் தான் முகப்பரு, கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவற்றை போக்க முடியும்.

மேலும் இங்கு ஓர் அற்புதமான மாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தினமும் சருமத்திற்கு பயன்படுத்தினால் சரும பிரச்சனைகள் மாயமாய் மறைந்து அழகு கூடும்.

தேவையான பொருட்கள்:
  • பேக்கிங் சோடா – சிறிது
  • ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டீஸ்பூன்
  • தேன் – சிறிது
  • எலுமிச்சை – 1/2
செய்முறை
  • முதலில் ஒரு டம்ளரில் பாதி நீரை நிரப்பி அதில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • மற்றொரு டம்ளரில் பேக்கிங் சோடா போட்டு அத்துடன் கலந்து வைத்துள்ள வினிகர் நீர் சிறிது மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, அதோடு எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
  • முதலில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும்.
  • பின்பு தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • இந்த மாஸ்க்கை போடுவதன் மூலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, முகப்பருக்கள் மற்றும் கருமையான தழும்புகள் நீங்கி, முகம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் இருக்கும்.
SHARE