இலங்கையின் யுத்தத்திலிருந்து பாடங்களை கற்பதற்கு உலகநாடுகள் தவறியுள்ளன.

144

விடுதலைப்புலிகளை தோற்கடித்த இலங்கையின் அனுபவத்திலிருந்து உலகம் பாடம் கற்றுக்கொள்ள தவறிவிட்டது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் குறித்த பிழையான தகவல்கள் காரணமாக பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த தனது  அனுபவத்தை இலங்கை ஏனைய உலகநாடுகளுடன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில தனிநபர்களின் பிழையான தகவல்கள் காரணமாக நாங்கள் அதற்கான வாய்ப்பை இழந்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் வெளிநாட்டு தூதுவர்களாக மிகச்சிறப்பாக செயற்பட்டு அதிகளவு பங்களிப்பை வழங்கியுள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சேவையை சேர்ந்த இராஜதந்திரிகளை விட முன்னாள் இராணுவ அதிகாரிகள் தூதுவர்களாக சிறந்த பணியாற்றியுள்ளனர் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிலர் ஏன் முன்னாள் இராணுவ அதிகாரிகளை தூதுவர்களாக நியமித்தீர்கள் என என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளனர் என குறிப்பிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய சேவையை அங்கீகரிப்பதற்காகவே அவர்களுக்கு அந்த நியமனங்களை வழங்கினோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நாட்டை பற்றி அதிகளவு விடயங்களை அறிந்தவர்களாக உள்ளனர்,எனவும் தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச யுத்தத்தில் பங்கெடுத்தவர்கள் மனிதர்கள் பற்றிய ஆழமான புரிந்துணர்வும் மனிதர்கள் குறித்த அக்கறையும் உள்ளவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வியட்நாம் ஈராக் போன்ற நாடுகளில் இருந்து பல போர்இலக்கியங்கள் வெளியாகியுள்ள இலங்கையில் அவ்வாறான நூல்கள் இல்லை எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அமைப்பை வெற்றிகரமாக தோற்கடித்த பின்னரும் ஏன் இது குறித்த நூல்கள் வெளியாகவில்லை என இந்திய அதிகாரியொருவர் என்னிடம் கேள்வி எழுப்பினார் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

SHARE