கொழுப்பு படைகளை எரிபொருளாக பயன்படுத்த முயற்சி

226

‘Fatbergs’ எனப்படுபவை பாதாளச் சாக்கடையினுள் காணப்படும் உயிரியல் பிரிகைக்கு உட்படாத கொழுப்பு திண்மக் கட்டிகள் ஆகும்.

இது கொழுப்பு மற்றும் கிரீஸ், அழுக்கடைந்த பொருட்களுடன் ஒன்றாகப் படிவதால் உருவாகின்றது.

இவை ஆபத்தானவை என நாம் இதுவரையில் நினைத்திருக்கக்கூடும்.

ஆனால் கழிவுச் சாக்கடையை அடைக்கக்கூடிய இவை உண்மையில் நன்மை தரக்கூடும் என புதிய ஆய்வொன்று தெருவிக்கின்றது.

கனடாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு Fatbergs இனை ஆக்கும் கொழுப்பு, எண்ணெய்கள் மற்றும் கிரீஸ் (FOG) ஆகியன உடைக்கப்பட்டு அவை உயிரின எரிபொருட்களாக மீண்டும் பயன்படுத்தப்பட முடியும் என நிரூபித்துள்ளது.

FOG ஆனது சேதன மூலக்கூறுகளை அதிகளவில் கொண்டுள்ளது. இவை நுண்ணுயிர்களால் பயன்படுத்தப்பட்டு விளைவாக மெதேனை தோற்றுவிக்கின்றது. இவ் வாயு பெறுமதிமிக்கதாயிருப்பதுடன், உயிரியல் எரிபொருளாகப் பயன்படுத்தப்படக்கூடியது என சுற்றுச்சூழல் பொறியாளர் Asha Srinivasan தெரிவிக்கின்றார்.<

SHARE