திருகோணமலை துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்கள்

133

இந்தியாவின் மூன்று போர்க்கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தில் நேற்று நங்கூரமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று கப்பல்களும் 6 நாட்கள் நடத்தப்படவுள்ள பயிற்சியில் பங்கேற்பதற்காகவே வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் சுமாத்ரா, ஐஎன்எஸ் கிர்ச், ஐஎன்எஸ் கோரா திவ் ஆகிய கப்பல்களே இலங்கை கடற்படையினருடன் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.

இந்திய உயர்ஸ்தானிகரக தகவல்படி இந்த பயிற்சிகள் அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE