சீனிகம வரலாற்று சிறப்பு மிக்க தெவொல் விகாரையின் வருடாந்த பெரஹரா காரணமாக நாளை தொடக்கம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை காலி – கொழும்பு பிரதான வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மதியம் 1.10 மணிக்கு பெரஹரா வீதி உலா வரவுள்ள நிலையில் குறித்த காலப்பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
அதேபோல், நாளை மறுநாள் பிற்பகல் 1.15 தொடக்கம் 17 ஆம் திகதி இரவு 9.30 மணி வரை இவ்வாறு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் வீதியின் ஒரு ஒழுங்கையில் மாத்திரம் வாகன போக்குவரத்து இடம்பெறும் என காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மோதரை – மாதம்பிட்டி வீதியில் நீர் குழாய் பொருத்தும் நடவடிக்கை காரணமாக இன்று இரவு 9 மணிமுதல் 17ம் திகதி காலை 5 மணி வரை குறித்த வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே வாகன ஓட்டுநர்கள் இவற்றை கருத்தில் கொண்டு செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.