கொத்தமல்லி ஜீஸ் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

182

கொத்தமல்லியில் ஆன்டி மைக்ரோபையல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. மேலும் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் கொத்தமல்லி உணவில் மட்டும் சேர்த்து கொள்ளாமல் அதை ஜூஸ் செய்து தினமும் பருகி வருவதினால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • கொத்தமல்லி இலை- தேவையான அளவு
  • எலுமிச்சை-1
  • தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை
  • முதலில் கொத்தமல்லி இலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பின் அதை நீர் ஊற்றி கழுவிய பின்னர் அடுப்பில் சிறிது நேரம் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் அற்புதமான கொத்தமல்லி ஜூஸ் தயார்.
  • மேலும் இந்த ஜூஸை காலை உணவுக்கு முன் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் ஒரு புதிய புத்துணர்ச்சி கிடைத்தது போன்ற உணர்வு உண்டாகும்.
நன்மைகள்
சரும நன்மைகள்
  • கொத்தமல்லி ஜூஸ் சரும பிரச்சனைகளான சரும வறட்சி மற்றும் பூஞ்சையால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை சரி செய்ய பெரிதும் உதவுகின்றது. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், பல தீவிர சரும பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவும்.
இதய நன்மைகள்
  • கொத்தமல்லியில் உள்ள ஏராளமான அத்தியாவசிய எணணெய்கள், கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும். இதனால் இதயத்தின் செயல்பாடு மேம்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.

இரத்த சோகை
  • இரத்த சோகை இருப்பவர்கள் கொத்தமல்லி ஜூஸ் குடிப்பது நல்லது. ஏனெனில் இதில் ஹீமோகுளோபின் உற்பத்திக்குத் தேவையான இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
இரத்த அழுத்த பிரச்சனை
  • கொத்தமல்லியில் கனிமச்சத்துக்களான மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்றவை அதிகமாகவும், சோடியம் குறைவான அளவிலும் உள்ளது. ஆகவே இதன் ஜூஸை ஒருவர் தினமும் சிறிது குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

வலிமையான எலும்புகள்
  • கொத்தமல்லியில் உள்ள கால்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களான ஆஸ்டியோபோராசிஸ் மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கும்.
எடை குறைவு
  • எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் காலையில் சிறிது கொத்தமல்லி ஜூஸைக் குடித்தால், அடிக்கடி வரும் பசி உணர்வைத் தடுத்து, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும்.

SHARE