சட்ட விரோதமாக மதுபானம் விற்பனைக்கு எதிராக செயற்பட்ட நபர் பலி!

220

இரத்தினபுரி – கொலுவாவில – பாம்காடன் தோட்ட பிரதேசத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனைக்கு எதிராக செயற்பட்ட நபர் ஒருவர் நேற்று முன்தினம்  அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி   சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரி இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா தலைமையில் நேற்று பகல் பாம்கார்டன் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதில் பெருந்திரலான தோட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி ஆர்ப்பாட்டம் சில மணி நேரம் இடம்பெற்றது.

சந்தேகநபரை  உடனடியாக கைதுசெய்வதாக. பொலிஸார் உறுதியளித்ததையடுத்து ஆரப்பாட்டம் கைவிடப்பட்டது.

மேற்படி பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE