கானாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலி

190
கானாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலி
கானாவில் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில்  தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கானாவின் வடக்கு பகுதியில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள நதிகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. அணைகளும் நிரம்பியுள்ளன. அந்த வகையில், புர்கினா பாஸோ என்ற இடத்தில் உள்ள பாக்ரே அணையும் நிரம்பியது. இதையடுத்து, உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால், கரையோரம் வசித்த மக்கள் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.
இதில், 34 பேர் பலியாகியுள்ளனர். இரண்டு பேர் மாயமாகி இருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளப்பெருக்கால், 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த துயர சம்பவம் குறித்து கானா அதிபர் அகுபு அட்டோ கூறும் போது, “ அணையில் உபரி நீர் வெளியேற்றப்படும் போது நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதிர்ஷ்டவசமாக கடந்த வாரம் முதல் மழை குறைந்துள்ளதால், வெள்ளநீர் குறைந்துள்ளது”  என்றார். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அதிபர் நேரில் சென்று பார்வையிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
SHARE