அம்பானி எதற்காக சொர்க்கத்தை தனது மகளுக்கு தேர்ந்தெடுத்தார்?

189

இத்தாலியில் உள்ள Lake Como என்ற இடத்தில் தான் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவின் நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்துள்ளது.

Lake Como என்ற இந்த இடம் காதலை குறிக்கும் மற்றும் சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. அதன் காரணத்தினாலேயே இந்த இடத்தை அதிகம் பேர் தெரிவு செய்கிறார்கள்.

1568 ஆம் ஆண்டு Lake Como வில் ஆடம்பர மாளிகை கட்டப்பட்டது. அதன் பின்னர் இது சொகுசு ஹொட்டலாக மாற்றப்பட்டது. மேலும், திருமணத்திற்காக இங்கு வில்லாக்களும் உள்ளன.

இங்கு மொத்தம் 12 அறைகள் உள்ளது. அனைத்தும் மரச்சாமன்களால் அலங்கரிகப்பட்டுள்ளன. நதிகளுக்கிடையே அமைந்துள்ள இந்த வில்லாக்கள் பார்ப்பதற்கு மிக அழகாகவும் அதே சமயத்தில் இந்த காதல் குறிக்கும் இடமாக இரு மக்களால் கருதப்படுவதால் அம்பானி இந்த இடத்தை தேர்வு செய்துள்ளார்.

இங்கு ஒரு இரவுக்கு ஹொட்டல் அறை வாடகையாக 70,000 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. மொத்தம் 3 நாட்கள் நிச்சயதார்த்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. விருந்தினர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய இசையுடன் இந்த நிச்சயதார்த்தம் களைகட்டியுள்ளது.

SHARE