அவுஸ்திரேலியா பெண்ணை திருமணம் செய்துகொண்ட இந்தியர், குடிபோதையில் மனைவியை குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் தொடர்பாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த Douglas Derick Eustace (44) என்ற நபர் அவுஸ்திரேலியாவிற்கு கோடை விடுமுறையை கழிக்க சென்ற போது Mary Freeman (41) என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.
பின்னர் இருவருக்கும் பிடித்து போகவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணமாகி மூன்று மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், ஜனவரி 27-ம் தேதி இரவு நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர்.
அப்போது ஆண் பெரியவரா? அல்லது பெண் பெரியவளா? என்ற விவாதம் நடந்துள்ளது. மது போதையில் விவாதம் வாக்குவாதமாக மாறியிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த Derick, கத்தியால் Mary-ன் மார்பு பகுதியியல் சரமாரியாக குத்தியுள்ளார்.
Mary-ன் அலறல் சத்தம் கேட்டு மேல் தளத்திற்கு சென்ற நண்பர்கள், ரத்த வெள்ளத்தில் Mary உயிருக்கு போராடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், Mary-ன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதே சமயம் மனைவியை கொலை செய்த Derick, எந்த ஒரு கவலையுமின்றி புகைபிடித்துக் கொண்டே அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் அவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அங்கு வழக்கினை விசாரித்த நீதிபதி வரும் டிசம்பர் 12-ம் தேதி வரை குற்றவாளிக்கு நீதிமன்ற காவல் விடுத்து உத்தரவிட்டுள்ளார்.