கிணறு தோண்டியவருக்கு நடந்த விபரீதம்

142

அம்பாறை, கொடுவில் பகுதியில் கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒருவர் மணல் மேட்டிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலைப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இச் சம்பவத்தில் பரிதாபமான உயிரிழந்துள்ளார்.

அம்பாறையில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைப் பெற்றுக் கொள்வதற்காக கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE