-மன்னார் நகர் நிருபர்-
தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் உட்பட மூவர் சுங்கத்ததுறை அதிகாரிகளளால் கைது செய்பட்டுள்ளனர்.கைது செய்யப்படவர்களிடம் அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.
தங்கச்சி மடம் கடற்பகுதியில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு அகதிகள் செல்லவுள்ளதாக இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று புதன் கிழமை அதிகாலை 1 மணியளவில் இராமேஸ்வரம் தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்குரிய முறையில் விடுதியில் தங்கியிருந்த இலங்கை பெண் ஒருவரை பிடித்து விசாரனை செய்தனர். விசாரனையில் இலங்கை தலைநகர் கொழும்பைச் சேர்ந்த ரமணி (வயது-42) என்பது தெரிய வந்தது.
இவர் சட்ட விரோதமாக படகில் இலங்கைக்கு தப்பி செல்ல இருந்தது விசாரனைகளின் மூலம் தெரிய வந்தததையடுத்து ரமணி மற்றும் இலங்கைக்கு செல்ல ஏஜெண்டாக செயல் பட்ட தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆல்வின், வாகன ஓட்டுநர் ஒருவர் உட்பட மூவரையும் கைது செய்த இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட ரமணியிடம் சுங்க துறையினர் விசாரனை செய்த போது தான் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருச்சி கல்லூரியில் படிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக விமானம் மூலம் திருச்சி வந்ததாகவும் விசா காலம் முடிந்த காரணத்தால் சட்டவிரோதமாக கள்ள தோணில் யாழ்பாணம் செல்வதற்க்காக தங்கச்சிமடத்ததை சேர்ந்த ஆல்வின் என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தாகவும் ஆனால் அவர் ப்ளாஸ்டிக்கு படகிற்க்கு பதிலாக நாட்டுபடகில் செல்ல சொன்னதால் எனக்கு பயம் ஏற்ப்பட்டது. எனவே இரண்டு நாட்கள் இராமேஸ்வரத்தில் தங்கி பின்னர் ப்ளாஸ்டிக் படகு கிடைத்த உடன் இலங்கைக்கு செல்ல இருந்ததாக தெரிவித்துள்ளார்.