திருகோணமலை – அக்போபுர பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பன்றி இறைச்சி 12 கிலோ வைத்திருந்த ஒருவருக்கு முப்பதாயிரம் ரூபாய் தண்டப் பணம் விதித்து இன்றைய தினம் நீதிமன்றில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்போபுர, தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டப் பணம் விதிக்கப்பட்டது.
குறித்த நபர் பன்றியை வேட்டையாடி, அதன் இறைச்சி 12 கிலோ கிராமை வீட்டில் வைத்துள்ளதாக அக்போபுர பொலிஸாருக்கு ரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் கைது பொலிஸார் கைது செய்து, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளார்.
இதன்போதே முப்பதாயிரம் ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், 12 கிலோ பன்றி இறைச்சியையும் எரிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.