மல்வத்து பீடத்தின் சியம் மகா நிக்காயவின் சிரேஷ்ட தேரரான அளுத்கம ஶ்ரீ தம்மானந்த, இன்று காலை தனது 103 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
மல்வத்து பீடத்தின் சியம் மகா நிக்காயவின் சிரேஷ்ட செயற்குழுவின் உறுப்பினரான அளுத்கம ஶ்ரீ தம்மானந்த தேரர், கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.