இந்தோனேசியாவில் பாரிய இயற்கை அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள பலுவின் தேவாலயமொன்றிற்குள் இருந்து 34 மாணவர்களின் உடல்களை மீட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவினால் புதையுண்டுள்ள தேவாலயத்திற்குள்ளிருந்தே மீட்பு பணியாளர்கள் உடல்களை மீட்டுள்ளனர்.
ஜொனேஜே தேவாலய பயிற்சி நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பைபிள் முகாமில் கலந்துகொண்டிருந்த 86 மாணவர்கள் பூகம்பத்தின் பின்னர் காணாமல்போயுள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 34 மாணவர்களின் உடல்களை மீட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பைபிள் முகாம் இடம்பெற்ற பகுதியிலேயே உடல்களை கண்டுபிடித்துள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் உடல்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் சேறு காரணமாக மீட்பு நடவடிக்கைகள் கடினமாக உள்ளன என மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் குறித்த விபரங்களை ஏனைய உடனடியாக உறுதி செய்ய முடியாமலுள்ளது எனவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பலுவில் இடிந்து விழுந்த ஏழு மாடி ஹோட்டலிற்குள் மீட்புபணிகள் இன்னமும் தொடர்கின்றன.
இதுவரை 12 பேரை மீட்டுள்ளோம் இதில் மூவரே உயிருடன் வெளியில் வந்தனர் என மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.