ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சமூக ஆய்வு அமர்வு நேற்று ஜெனீவாவில் ஆரம்பமானது. இதற்கு இலங்கை தலைமை தாங்குகின்றது.
இலங்கையின் ஜெனீவாவுக்கான வதிவிடப்பிரதிநிதி அஸீஸ் இந்த அமர்வுக்கு தலைமை தாங்குகின்றார்.
இவர் இலங்கையின் வதிவிடப்பிரதி தலைவர் மற்றும் அறிக்கையாளராக செயற்படுகிறார்.
இந்த அமர்வில் மனித உரிமைகளை மேம்படுத்தும் திட்டங்கள் தொடர்பில் ஆய்வுகள் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலெட் மற்றும் பேரவையின் தலைவர் யோகிஸ்லோவ் சுக் ஆகியோரின் மத்தியில் இலங்கையின் பிரதிநிதிக்கு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.