வர்த்தக சேவை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடக்கூடாது என இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது கவலைக்குரிய விடயம் என திலகரத்னே தில்ஷான் கூறியுள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் தில்ஷான் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் தேசிய அணியில் விளையாடிய காலப்பகுதியில் சில நாட்களில் போட்டிகள் முடிவடைந்து விமான நிலையத்திலிருந்து நேராக வர்த்தக சேவை கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்வோம்.
வர்த்தக சேவை கிரிக்கெட் போட்டி மிகவும் சிறந்தது.
மாகாணங்களுக்கு இடையிலான போட்டியைவிட சிறந்தது. பல வீரர்கள் இதில் கலந்துகொள்ளாமை கவலைக்குரியது.
இதுகுறித்து வீரர்களிடம் கேட்ட போது, உபாதைக்குள்ளாவார்கள் என்பதால் சில போட்டிகளில் விளையாட வேண்டாம் என கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
வீரர்களுக்கு பயிற்சியே அவசியம் தான், பயிற்சியை விட போட்டியொன்றில் விளையாடுவது என்பது சிறந்தது. துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களைப் பெறமுடியாத காலப்பகுதியில் இந்தத் தொடர் விசேடமானது என கூறியுள்ளார்.