இந்த வாரம் நோர்வேக்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதையடுத்து லண்டனுக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் இன்றைய தினம் நோர்வேக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். அங்கு நோர்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் உள்ளிட்ட ஏனையோருடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் அவர் தமது விஜயத்தின்போது பல வணிக கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம், 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதிவரை கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் விஜித விஜயமுனி சொய்ஸாவுடன் ஒஸ்லோவுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த விஜயத்தின் முடிவில் அவர் லண்டனுக்கு செல்லவுள்ளார் என்று தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், அது குறித்து மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.