சர்வதேச நிலைமைகள் மற்றும் நாட்டின் முன்னுரிமைகள் தொடர்பான அபிவிருத்திகளுக்கு இணங்க அடுத்த ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து புதிதாக தயாரிக்கப்பட்ட சட்டம் கொண்டுவரப்பட உள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சட்டத்தை மேம்படுத்துவதில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து தாங்கள் பணியாற்றி வருவதாகவும், தற்போது அது சட்ட வரைவாளரின் கைகளில் உள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அது விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார்.