ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக பர்ஹாம் சலிஹ் அந் நாட்டின் நாடாளுமன்றினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஈராக்கில் சதாம் ஹூசைனின் வீழ்ச்சிக்குப் பின்னர் அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது.
இருந்த போதும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஈராக்கின் பெரும் பகுதியை கைப்பற்றி தனி நாடு அமைத்தனர்.
அமெரிக்க கூட்டுப்படையின் உதவியுடன் கடந்த டிசம்பர் மாதம் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஈராக்கிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட்டு மஹ்தாதா தலைமையிலான சய்ரூன் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இதைத் தொடர்ந்தே நேற்று நடை பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பர்ஹாம் சலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த குர்தீஷ் தேசபக்த யூனியன் கட்சியின் வேட்பாளராக பர்ஹாம் சலிஹ் மற்றும் குர்தீஷ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பவுட் ஹூசைன் ஆகியோர் ஜனாதிபதிக்கான வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
தேர்தலில் நாடாளுமன்றின் பெரும்பான்மையை பெற்று 58 வயதான பர்ஹாம் சலிஹ் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.