நண்பரின் வீட்டில் தனிமையில் இருந்த மாணவி, மாணவன்

132

உலக சிறுவர் தினத்தன்று தம்புள்ளை பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் தனிமையில் இருந்த பாடசாலை மாணவி மற்றும் மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதுடன் மாணவனை பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

15 வயதான பாடசாலை மாணவியும், 18 வயதான பாடசாலை மாணவனும் காதலித்து வந்துள்ளனர். தம்புள்ளை நகருக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் இவர்களின் காதல் விடயத்தை அறிந்து கொண்ட பெற்றோர் கடுமையாக கண்டித்து எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவன், மாணவியை இரவு நேரத்தில் உறவினர் வீட்டில் சந்தித்துள்ளார். அங்கு இருவரும் தவறாக நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்து கொண்ட இவர்களின் பெற்றோர் மீண்டும் கடுமையாக கண்டித்து எச்சரித்துள்ளனர். இதன் பின்னர் இருவரும் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய மாணவியும், மாணவனும் இருக்கும் இடத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்களுக்கு உதவியவர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தம்புள்ளை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோரின் பொறுப்பில் இருந்து 15 வயதான சிறுமியை கடத்தி சென்று, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மாணவனுக்கு எதிராக பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE