சிலருக்கு முகத்தில் இருக்கும் அதிக எண்ணெய் பசை காரணமாகவே முகப்பொலிவை இழந்து கருமையாக காணப்படுகின்றனர்
மேலும் கருமையைப் போக்க கீழே உள்ள சில இயற்கை வழிகளை பின்பற்றினால் அவர்களும் வெள்ளையாகவும் ஜொலிக்கலாம்.
கற்றாழை ஜெல்
3 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
ஆரஞ்சு ஜூஸ் மற்றும் மஞ்சள் தூள்
2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸில்,1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
ஓட்ஸ் மற்றும் தயிர்
2 டேபிள் ஸ்பூன் தயிரில், 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
தக்காளி சாறு
4 டீஸ்பூன் தக்காளி சாற்றில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் நீரில் கழுவ வேண்டும்.
கடலை மாவு
2 டீஸ்பூன் கடலை மாவுடன் 1 டீஸ்பூன் பால், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.
க்ரீன் டீ மற்றும் தேன்
க்ரீன் டீ நீர்மத்தில் சிறிது தேன் மற்றும் அரிசி மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, பின் உலர வைத்து கழுவ வேண்டும்.
ஆரஞ்சு பழத்தோல் மற்றும் பால்
ஆரஞ்சு பழத்தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அதனை சிறிது எடுத்து அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்து கழுவ முகத்தில் உள்ள கருமை அகலும்.