SMART-1 விண்கலம் சந்திரனில் மோதிய இடத்தை கண்டுபிடித்தது நாஸா

619

2003 இல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நிலவின் ஓடுபாதைக்கு SMART-1 எனும் விண்கலத்தை அனுப்பியிருந்தது.

13 மாத பயணத்தின்பின் நிலவைச் சென்றடைந்திருந்த இவ் விண்கலம் அடுத்த 3 வருடங்களுக்கு சந்திர மேற்பரப்பு தொடர்பாக ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தது.

பின்னர் செப்டம்பர் 3, 2006 இல் மேற்படி விண்கலம் திட்டமிட்டே சந்திர மேற்பரப்பில் மோதப்பட்டு ஆய்வு நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.

ஆனாலும் ஒரு தசாப்தகாலமாக இவ் விண்கலம் மோதிய சரியான புள்ளியை விஞ்ஞானிகளால் அறியமுடியாமல் போயிருந்தது.

தற்போது கடந்தவருடம் நாஸாவால் படம்பிடிக்கப்பட்டிருந்த புகைப்படத்தின் உதவியுடன் SMART-1 விண்கலம் மோதிய திருத்தமான புள்ளி அறியப்பட்டுள்ளது.

இதன்படி அப்புள்ளியின் ஆள்கூறுகள் 34.262° தெற்கு, 46.193° மேற்கு.

புகைப்படத்தின்படி மேற்படி விண்கலம் சந்திரனில் மோதியதிலிருந்து வடக்கு – தெற்கு நோக்கி பயணித்திருக்கலாம் எனத்தெரியவருகிறது.

மேலும் இப் புகைப்படத்தில் இதன் விளைவாக ஏற்பட்ட பள்ளங்களையும் இனங்காணக்கூடியதாகவுள்ளது.

இப் பள்ளம் 4 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்டது என அறியப்படுகிறது.

SHARE