இலங்கையில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட இந்திய மாபியா கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு புறக்கோட்டையில் போலி கடன் அட்டை மூலம் 37 கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
கோல்டன் சென்டரில் நடை அடகு பிடிக்கும் நிதி நிறுவனம் என்ற பெயரில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.
இந்தியாவை சேர்ந்த விசேட வைத்தியர் ஒருவரின் தலைமையின் கீழ் கடன் அட்டை மோசடி ஈடம்பெற்றுள்ளது.
மோசடியில் ஈடுபட்ட கும்பல் நேற்று முன்தினம் குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளது.
கடன் அட்டை இயந்திரத்தை பயன்படுத்திய 37 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடியான முறையில் பெற்று கொண்டுள்ளது.
வைத்தியருக்கு மேலதிகமாக இந்திய சட்டத்தரணி, அந்த நாட்டு ஊடகவியலாளர், கோடீஸ்வர வர்த்தகர் உட்பட 5 பேர் இந்த கும்பலில் இருப்பதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த குடும்பல் சர்வதேச ரீதியாக மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலுள்ள கோடீஸ்வர வர்த்தகர்களின் கடன் அட்டை தரவுகளை திருடி, அந்த தரவுகளை போலி கடன் அட்டைகளில் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த கும்பல் தொடர்பான மேலதிக விசாரணைகளை திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.