திடீரென உடல் நடுக்கம் ஏற்பட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று சரசாலை வடக்கில் நடந்துள்ளது.
நேற்றுக் காலை வீட்டு வளவை துப்புரவு செய்துவிட்டு குளித்து முடித்த அவர், காலை உணவு அருந்தியுள்ளார். அப்போது அவருக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின்னர் அவர் படுக்கச் சென்றுள்ளார். அவர் அசைவின்றிக் காணப்பட்டதால் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற உறவினர்களிடம், பரிசோதனை செய்த வைத்தியர் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
உயிரிழந்தவர் 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்