இரகசியமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் கொடுத்து வந்த குடும்பஸ்தர் கைது

128

இறக்கக் கண்டி பகுதியில் உள்ள வீடொன்றில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று மேற்கொண்ட திடீர் சுற்றி வலைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு -08, பொரளை எனும் முகவரியை பிறப்பிடமாகக் கொண்டவரும் வாழை ஊற்று, இறக்கக்கண்டி, நிலாவெளி எனும் முகவரியில் வசித்து வந்த(38) குடும்பஸ்தர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரிடமிருந்து 2515 மில்லி கிராம் ஹொரோயின் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கும் குறித்த பகுதியில் மே மாதம் தொடக்கம் வாடகை வீட்டில் வைத்து போதைப் பொருள் விற்பனை செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரை கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் குச்சவெளி பொலிஸில் ஒப்படைத்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE