திருகோணமலை குச்சவெளி பகுதியில் பிரதேச செயலாளர் ஒருவரின் கடமைகளை செய்ய விடாது இடைஞ்சல்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் நபரை இம்மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டார்.
புடவைக்கட்டு,செந்தூர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரதேச செயலாளரின் ஏற்பாட்டில் நடைபெற்ற மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு குறித்த சந்தேகநபர் எதிர்ப்பு தெரிவித்து அவரின் கடமைகளுக்கு இடையூறாக, தகாத வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த நபரை பொலிஸார் கைது திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.