மகிந்தவின் அதிரடி! இலங்கையில் நூற்றுக்கணக்கான இணையத்தளங்கள் முடக்கம்

359

 

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், நூற்றுக்கும் அதிகமான இணையத்தளங்கள் இலங்கையில் பார்வையிட முடியாதவாறு அரசாங்கத்தினால் முடக்கப்பட்டுள்ளன.

Mahinda-Rajapaksa

தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்ததையடுத்து, தேர்தல் பரபரப்புக்களும் பதற்றங்களும் அனைவரையும் ஆட்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

அந்த வகையில், இலங்கையில் அதிரடியாக நூற்றுக்கும் மேற்பட்ட செய்தி இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டிலிருந்து இயக்கும் தமிழ் ஊடகங்களும் இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் இயங்கும் ஊடகங்களுமே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன.

தேர்தலுக்கு முன்னரே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தோல்வி அச்சம் கொண்டுள்ளதை இவ்வாறான செயற்பாடுகள் உணர்த்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

SHARE