நாம் தனித்துவமானவர்கள் யாருடனும் கூட்டு இனையோம். ஆனால் விக்கி ஐயா மட்டும் வந்தால் வண்டியை கட்டுவோம் என அங்கலாய்கும் அடிப்பொடிகளே-அன்புடன் ஸ்ரீரங்கன்.

163

நாம் தனித்துவமானவர்கள் யாருடனும் கூட்டு இனையோம். ஆனால் விக்கி ஐயா மட்டும் வந்தால் வண்டியை கட்டுவோம் என அங்கலாய்கும் அடிப்பொடிகளே.

கட்சியை வளர்க்க தமிழ் மக்களின் யாதார்த்தபூர்வமான தீர்வை அடைய நீங்கள் தடையாக இருப்பது அசிங்கத்திலும் அசிங்கம்.

எப்போதவது ஒரு நாள் பட்டினி இருந்து பழக்கம் இருக்கா? தமிழ் மக்களுக்காக போராட புறப்பட்ட அனைத்து போராளிகளும் பசி பட்டினி அறிந்தவர்கள். அயல் நாட்டில் பயிற்சிக்கு சென்றவர்களின் நிலமை சொல்லில் மாளாது. அதை விட கொடுமை வல்லரசுகளின் விருப்பு வெறுப்புக்காக அண்ணன் தம்பிகளே துரோகி எனத் தூற்றி தமக்குள் மோதிக்கொண்டது.

மாற்று இயக்கத்தின் செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து தனித்து இரு தசாப்தகாலமாக இந்த மண்ணின் விடுதலைக்காக ஆயுத போரை முன்னேடுத்த போராளிகள் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களின் தியாகம் என்றேன்றும் மதிக்கப்பட வேண்டியது.

இங்கு ஒரு முக்கிய விடயம் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.மாற்று இயக்கத்தில் மடிந்த போராளிகள் அனைவரும் சொத்து சேர்க்க இயக்கத்தில் சேரவில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்காகவே அவர்களும் இந்த மண்ணுக்குள் புதையுண்டனர்.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதேனில் அவர் அவர் தலைமையின் கொள்கையின் அடிப்படையில் தான் சகல இயக்க போராளிகளும் செயல்பட்டனர். இதில் இரு இயக்கத்திற்கு பின்னால் ஒரு வல்லரசின் அனுசரனை இருந்தது. அதன் அனுகுமுறைக்கு ஏற்றவாறு செயல்பட்டது தவிர்க்கமுடியாதது.

அதை நாம் வலிந்து ஏற்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. காரணம் இந்தியாவையும் நாம் எதிர்தால் எமக்கு இரண்டு எதிரிகளுடன் போரிடமுடியாது. இறுதியில் அது எமக்கு மட்டுமல்ல. தமிழருக்கும் அழிவையே தரும் என எண்ணினோம்.

முடிந்தளவு நாம் பலமாகி நிர்பந்தங்கள் மூலம் மாகாணசபையை மிகப் பெரும் அதிகாரபீடமாக மாற்ற முயற்சித்தோம். பிறேமதாச புலிகள் இனைந்ததன் மூலம் எம் முயற்சி சறுக்கியது. அதன் பின் நாம் உருவாக்கிய வடகிழக்கு இனைந்த மாகாணசபை கழுதை தேய்ந்து கட்டேறும்பாகியது நீங்கள் அறிந்ததே.

இன்று மாகாணசபை தேர்தலுக்கு மல்லுக்கட்டும் அனைவரும் அறிய வேண்டிய விடயம் இந்த அதிகாரத்தை பெற நாம் கொடுத்த உயிர் விலை அளப்பெரியது.
துரோகி பட்டத்தை சுமந்தோம். வடநாட்டுக்கு போய் ஒரு வேளை சாப்பாட்டுக்கு இரத்தம் விற்று சாப்பிட்ட வரலாறும் ‘உள்ளது.

தொண்ணூற்றியிரண்டு பிற்பகுதியில் தலைமை பொறுப்பை ஏற்ற சுரேஷ் பிறேமச்சந்திரன் எடுத்தமுடிவு நமக்குள் மோதாமல் விடுதலை பேரை முன்னேடுக்கும் புலிகளுடன் முறன்படாமல் அரசியல் செய்வது என்பது என்று இதனால் நிறைய போராளிகள் குடும்பத்துடன் இனையமுடிந்தது. சாதரன வாழ்க்கைக்கு திரும்பினார்கள்.

இவற்றை விவரிப்பதற்கு காரணம் உண்டு ஈழ விடுதலைக்காக அர்ப்பணித்த எத்தையோ பேர் இருக்க என்றுமே அயன் கலையாத உடுப்பும் சொகுசு வாகனங்களில் சவாரி செய்து புலிகளின் இலக்கை நாம் அடைவோம் என்று ஒரு கூட்டம் திரியுது அதை நினைக்கும் போது வேடிக்கையாக உள்ளது.

ஈழ விடுதலைக்காக தமது குடும்பம் சொத்து சுகம் துறந்து தெருவுக்கு வந்த அனைத்து தமிழ் இளைஞர்களும் கௌரவம் ஆனாவர்களே. தலைமைகள் தம் கொள்கைகளை நிறைவேற்ற பலிக்கடா ஆனவர்கள்.

இவர்களை எதற்கும் லாய்கில்லாத வெள்ளை வேஸ்ரி அரசியல்வாதிகளுடன் ஒப்பிடாதீர்கள்.இவர்கள் உசுப்பேற்றி பதவி சுகத்துக்கு அலைபவர்கள். வன்முறை வெடிக்கும் என்கிறார் எந்த ஆயுதம் தூக்கிய போராளித் தலைவனும் இந்நாளில் சொல்லாத வார்த்தையை எண்பதை தாண்டிய வெள்ளை வேஷ்ரி சொல்லுது.

இனி இரும்புடன் சமர்புரிய யாரும் முன்வரமாட்டார்கள் மண்ணில் எமக்கு இன்று இருப்பது சர்வதேச மென் அழுத்தம் மட்டுமே அதை ஆயுதமாக்கி தமிழர் உரிமையை சாத்தியப்படுத்துவதே. இன்றைய தேவை அதற்காக இதயசுத்தியுடன் செயல்படும் அறிவுசார் அரசியல்வாதியே தேவை.

அமெரிக்கா சீனா இந்தியா என தூற்றி திரிவதால் நன்மையை விட கேடே எமக்கு கிடைக்கும். பெரிய மேதாவித்தனமாக வல்லரசுகளை வம்புக்கு இழுப்பது. இது எந்த விதத்திலும் நமக்கு நன்மை பயக்காது.இவர்களை வளைப்பது எப்படி என சிந்தி அழகான பதில்கள் வரும் உன் எண்ணத்தில்..! அதற்கு அரசியல் அறிந்த சாணக்கியனாக இருக்கவேண்டும்.

SHARE