(நோட்டன் பிரிஜ் நிருபர்)
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதன்டி கார்பெக்ஸ் பிரிவு தொழிலாளர்கள்
வெளிகள உத்தியோகஸ்தரை இடமாற்றக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பணிக்கு சொந்தமான லெதன்டி குருப் கார்பெக்ஸ்
பிரிவு தோட்ட தொழிலாளர்களே 09.10.2018.செவ்வாய்கிழமை காலை வேலை நிறுத்த
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிகள உத்தியோகஸ்தர் மன்மத லீலையில் ஈடுபட்டு வந்த சம்பவம் வெளியான
நிலையில் குறித்த தோட்ட தொழிலாளர்கள் இன்றய தினம் தொழிலுக்கு செல்லாமல்
கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த வெளிகள உத்தியோகத்தர் பெண்களிடத்தில் தகாத விதத்தில் நடந்து
கொள்வதாகவும், இவ்வாறான அதிகாரியின் கீழ் பெண் தொழிலாளர்கள் தொழில்
புரிவதில் பாரிய அச்சம் கொண்டுள்ள நிலையில் குறித்த வெளிகள உத்தியோகத்தரை
வெளியேற்றக்கோரியும் இவ்வாறான செயற்பாட்டினால் தோட்டத்திற்கு அவப்பெயர்
ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
வெளியிடத்து பெண் ஒருவரை குறித்த வெளிகள உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட
விடுதில் தங்கவைத்து மனமத லீலைகளில் ஈடுபடுவதாக தோட்ட
தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியதுடன், கடந்த காலங்களிலும் தேயிலை மழைகளில்
தொழில் புரிந்த பெண் தொழிலாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
தோட்ட ஆலய முன்றலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தோட்ட முகாமையாளர்
கயான் ஏலபொல நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மு.இராமசந்திரன் ஆகியோர்
வருகை தந்ததுடன், தொழிலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டு மேற்படி
உத்தியோகத்தரை உடனடியாக வெளியேற்றக்கோரி தொழிலாளர்கள் அனைவரும் கை
எழுத்திட்ட மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதன் போது தொழிலாளர்களின் கோரிக்கையை எற்றுக்கொண்ட முகாமையாளர் விரைவில்
உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதாக அறிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள்
கலைந்து சென்றனர்.