20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்!

161

இலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளனர்.

20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்கான பட்டியல் தயாரிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்தே இந்த நடடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சில தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

SHARE