செயற்கைக் கருத்தரிப்பின் வெற்றி அளிக்கக் கூடிய வீதத்தை அதிகரிக்கவென புதிய சிகிச்சைமுறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பெண்ணொருவர் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கென “நொலாசின்” எனப்படும் மருந்து பயன்படுத்தப்படுகிறது.
இது முளையத்தை வினைத்திறனாக கருப்பையில் பதிக்க உதவுகிறது.
இது பெண்ணில் முளையத்தைப் பதிக்க 4 மணித்தியாலங்களின் முன்னர் வழங்கப்படுகிறது.
அண்மையில் ஜரோப்பாவில் 800 பெண்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனை ஆய்வொன்றின்போதே இது நிரூபிக்கப்பட்டுள்ளது.