சென்ற வாரம் வெளியான நோட்டா படத்தில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருந்தார். முழுக்க முழுக்க அரசியல் படமான இதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.
படத்தை பற்றி வரும் விமர்சனங்களுக்கு தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா ட்விட்டரில் பதில் கூறியுள்ளார்.
விமர்சனங்களில் இருந்து விலகி ஓடவில்லை, நானே பொறுப்பேற்கிறேன் என விஜய் கூறியுள்ளார்.
மேலும் ‘படத்தை பாராட்டியவர்களுக்கு நன்றி, படத்தின் மீதான விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன் – மாற்ற முயற்சிக்கிறேன்” என கூறியுள்ளார்.