பட்டினியாக கிடக்கும் வடகொரிய மக்கள்

179

வடகொரியா மக்கள் பசியும், பட்டினியுமாக இருக்கும் நிலையில் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

வடகொரியா அதிபரான கிம் ஜாங் உலக நாடுகள் பார்வையில் சர்வாதிகாரியாக திகழ்பவர்.

தன் மீதான இந்த பார்வையை மாற்ற அவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தென் கொரியா அதிபர் போன்ற உலக தலைவர்களை சந்தித்து நட்பு பாராட்டினார்.

வடகொரியாவை பொறுத்தவரை அந்நாட்டு மக்களில் 40 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டம் வெளியிட்ட அறிக்கையின் படி வடகொரியாவில் 10 மில்லியன் மக்கள் சரியான உணவில்லாமல் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவை என கூறப்பட்டது.

இப்படி மக்கள் கஷ்டப்பட்டு வரும் நிலையில் நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் £360,000 மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை புதிதாக வாங்கியுள்ளார்.

குண்டுதுளைக்காத வகையில் உள்ள இந்த காரில் உச்சக்கட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த தனியாக £150,000 செலவிடப்பட்டுள்ளது.

இந்த காரில் தான் சமீபத்தில் அமெரிக்காவின் Secretary of State மைக் பாம்பியோவை சென்று சந்தித்துள்ளார் கிம் ஜாங்.

SHARE