மிடூ” போராட்டத்தில் பாடகி சின்மயி வைரமுத்து கூறியிருப்பது முற்றிலும் உண்மையே. அதை இத்தனை வருடங்களுக்குப் பிறகு ஏன் சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்புவது மடத்தனமானது’ என்று ஆணித்தரமாக களத்தில் இறங்கியியிருக்கிறார் தமிழ், தெலுங்குத் திரையுலக ரசிகர்களின் டார்லிங் சமந்தா.
இது குறித்து இன்று தனது ட்விட்டரில் துணிந்து பதிவு செய்த சமந்தா, ‘டியர் ராகுல், சின்மயி. எனக்கு உங்கள் இருவரையும் 10 ஆண்டுகளாக தெரியும். நீங்கள் மிகவும் நேர்மையானவர்கள். உங்களது இந்த நேர்மையான குணம் தான் நம் நட்பில் நான் அதிகம் மதிப்பது. நீங்கள் சொல்வது உண்மையே !! #istandwithchinmayi என்று ட்விட்டரில் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.