வீடமைப்பு திட்டத்தை பகல் கனவு என்றவர்கள் மத்தியில் நான் நனவாக்கியுள்ளேன் – அமைச்சர் திகாம்பரம்

134

(நோட்டன் பிரிட்ஜ்  நிருபர்  மு.இராமச்சந்தின்) 

1994 ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் செய்ய முடியாதொன்ற.       ” தோட்டங்களில் வீடமைப்பு  சாத்தியமற்றது ” என்ற கூற்றை இன்று நான் முடியும் என்ன மூன்றாண்டு காலத்தில் செய்து காட்டியுள்ளேன் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
 பாடசாலை நிகழ்வுகளுக்கு நான் செல்லும் போது மறைந்து நிற்கும் ஆசியர்கள் சிலருக்கு மத்தியில்,  இன்று ஆசிரியர் சமுகத்தின் ஏற்பாட்டில் மலையக அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கத்திற்கும் உள்ளூராட்சி மன்ற திருத்த மசோதவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியமைக்கு இடம்பெறும்  பாராட்டு நிகழ்வில் நான் கலந்துகொண்டதையிட்டு மகிழ்ச்சியடைக்கின்றேன்.
இந்திய வம்சாவளி அமையத்தின் ஏற்பாட்டில் அட்டன் டி.கே.டயில்யு கலாசார மண்டபத்தில் 14 அன்று இடம்பெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொழிலாளகள் சந்தா பணத்தில் அரசியல் செய்யும் யாராயினும் அவர்களுக்கு துரோகம் செய்ய முற்பட்டால் வீதியிலிறங்கி அடிக்கும் காலம் வந்து விட்டது. ஏமாற்று அரசியலை எமது பாமர மக்கள் உணர்ந்து விட்டனர்.  அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் செய்யும் போதொல்லம் அரச உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுகின்றது. ஆனால் காலை முதல் மாலை வரை அதிகநேரம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அற்ற தொகையை வழங்க கம்பனிகள் முயற்சிக்கின்றது. ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைப்பது உறுதி. ஆனால் அது மேலதிக கொடுபனவாக இருக்க முடியாது. நாளொன்றின் அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனின் காந்திய வழியில் தோட்ட வாரியாக அகிம்சை போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் தெரித்தார்.
மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1994 ம் ஆண்டு  காங்கிரஸ் பத்திரிகையில் வெளியிட்ட செய்தியில் தோட்டங்களில் வீடமைப்பு திட்டம் சாத்தியமாவதை பகல் கனவு என்றார்கள். நான் அந்த கனவை நனவாக்கியுள்ளேன்.
தொடர்ந்து மலையக சமூக மாற்றத்தின் அச்சானியாக விளங்கும்  கல்விச் சமூகமாகிய  உங்களின் பேராதரவோடு மலையக சமூகத்திற்கு என் உயிருள்ள வரை சேவையாற்றுவேன் என  தெரிவித்தார்.
SHARE