கிண்ணியா அல் − -அக்‌ஸா தேசிய பாடசாலை உதைபந்தாட்ட சாதனையாளர்களுக்கான ஊர்வலம்

196

கிண்ணியா அல்- − அக்‌ஸா தேசிய பாடசாலை உதைபந்தாட்ட சாதனையாளர்களுக்கான ஊர்வலம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.

இதில் கிண்ணியா அல் − -அக்‌ஸா தேசிய பாடசாலையில் இவ்வருடம் உதைபந்தாட்ட பயிற்சிற்காக ரோட்டு பாசிலோனா ஊடாக ஸ்பெயின் (பார்சிலோனா) சென்றுவந்த மாணவனான கே.எம்.ஹாதிம், 12 வயதிற்கு கீழ் உதைபந்தாட்டதில் முதன்மை மாணவராக தெரிவு செய்யப்பட்டார் அவரையும் தென்னாசிய பாடசாலைகளுக்கு இடையிலான 46 வது ஆசியன் கிண்ண 18 வயது உதைபந்தாட்ட போட்டிற்கு இலங்கை அணி சார்பாக தெரிவு செய்யப்பட்ட ஏ.கே.எம். றியாஸ் கான்,

அல் − -அக்‌ஸா பாடசாலையிலிருந்து புஹாரியடி, மத்தியா கல்லூரி வீதி, அல் ஹிரா வீதி, மாஞ்சேலைச்சேனை சென்று அப்துல் கபூர் வீதி, றஹ்மானியா – வீதினூடாக சென்று கட்டையாறு மாஞ்சோலை ஹிஜ்ரா வீதினூடாக சென்று பாடசாலை வந்தடைந்தனர்.

இம் மாணவர்களை கௌரவிக்கும் முகமாக நடாத்தப்பட்ட இவ் ஊர்வலத்தில் பாடசாலையின் நலன் விரும்பிகள் மற்றும் பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

SHARE