இரண்டு அரச வங்கிகள், இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபைகள் கலைப்பு!

164

இரண்டு அரச வங்கிகள் மற்றும் முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபைகள் கலைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவை கலைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய இலங்கை வங்கி, மக்கள் வங்கி, மற்றும் இலங்கை முதலீட்டு சபை என்பவற்றின் பணிப்பாளர் சபைகளைக் கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தரவிட்டிருந்ததாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

SHARE