பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மாணவன் மொஹமட் நிஷாம்தீன் அக்குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பயங்கரவாத குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 25 வயதான மொஹமட் நிஷாம்தீன், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சார்பாக சிட்னி நகரை குண்டு வைத்துத் தகர்த்தல் மற்றும் அவுஸ்ரேலியாவின் முன்னணி அரசியல்வாதிகளை படுகொலை செய்தல் ஆகிய குற்றச்செயல்களுக்கான கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இருப்பினும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானதென நிரூபிக்கப்பட்டமையினால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.