நாடு முழுவதும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த காலநிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்குமெனவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பெரும்பாலான பகுதிகளில் பி.ப 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
வடக்கு, மற்றும் வடமேல் மாகாண கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யுமெனவும் ஏனைய சில இடங்களில் குறிப்பாக மத்திய, ஊவா சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்தவகையில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்குஅறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.