சிறுநீரக மாற்றுக்கு உதவி கோரும் ஆஷிக்

122

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஜனாதிபதி விருது பெற்ற சாரணரும், சிறந்த சமூக வேவையாளருமான சாய்ந்தமருது -11, அல்-ஹிலால் வீதியில்,  இல. 406 ஏ எனும் முகவரியில் வசிக்கும் பீ.எம். ஆஷிக்(வயது 30) என்பவர் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்.

இவரின் சிறுநீரகங்கள் அவசரமாக மாற்ற வேண்டியுள்ளது.  இதற்கு பெருந்தொகைப் பணம் தேவையாகவும் உள்ளது. இவரின் குடும்பம் மிகவும் சாதாரண குடும்பம் என்பதால் பணத்தைப் புரட்டுவதற்காக பலவழிகளிலும் முயற்சி செய்து வருகின்றனர்.

சமூக செயற்பாடுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, மிகவும் துடிப்புள்ள- ஆற்றல் நிறைந்த இவர், தனது ஒன்றரை வயது பிள்ளையைக் கூட பார்க்க முடியாத துயரமான சூழ்நிலையில் நீண்ட காலமாக வைத்தியசாலையில் கஷ்டப்படுகிறார். இந்தப் சிறு பச்சிளம் குழந்தைக்காக, அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்கு உதவி செய்யுமாறு குடும்பத்தினர் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றனர்.

எனவே இவருக்கு அவசரமாக சிறுநீரகம் மாற்றவேண்டியுள்ளதால் தம்மால் முடியுமான உதவிகளைச் செய்யுமாறு  தனவந்தர்கள் — பரோபகாரிகளிடம் அவரது குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.

ஓர் உயிரைக் காப்பாற்றுவது அவருடைய குடும்பத்தையே வாழவைத்த நன்மை இறைவனிடமிருந்து கிடைக்கும். (இவ்வாறான நிலையிலிருந்து இறைவன் அனைவரையும் காப்பாற்றுவானாக!)

பெரும் மனம் கொண்டு உதவி தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்ற சகோதர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு ஆஷிக் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இதேவேளை, உதவிகள் கிடைத்தாலும் அவை போதுமான நிலையில் இல்லாததினால், தயவு கூர்ந்து ஓர் உயிரைக் காப்பாற்ற தங்களால் முடியுமான பங்களிப்புகளை அவசரமாக வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

இதனுடன் வைத்தியசாலை சான்றிதழ்கள் மற்றும் ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக தகவல்களை 077 – 2242469 என்ற அவரது சகோதரர் பீ.எம்.றியாத் (YSO) தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

பீ.எம். ஆஷிக்

சாய்ந்தமருது இலங்கை வங்கி

கணக்கு இலக்கம்  – 82767513     

SHARE