மைத்திரியின் கருத்துக்கு மோடி பாராட்டு

154
இந்தியாவின் ‘றோ’ அமைப்பு தன்னை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக எவ்வித கருத்தையும் கூறவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக கொலை சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படுவது திரிவுப்படுத்தப்பட்ட ஒன்றெனவும் அவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி விரைவான மறுதலிப்பை பாராட்டுவதாகவும்  பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக  ஜனாதிபதி மைத்திரி  நேற்று முன்தினம் தன்னுடன் தொலைப்பேசியில் உரையாடியதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவின் ‘றோ’ அமைப்பு தன்னை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக எவ்வித கருத்தையும் ஜனாதிபதி மைத்திரி முன்வைக்கவில்லை எனவும் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை பாதிக்கும் நோக்கில் இவ்வாறு அறிக்கை திரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE